Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.535.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்து மூன்றாம் அதிகாரம்.



ஐம்பத்து நான்காம் அதிகாரம்.



சோதிச் சின்னம்.



5

எரியாடு கோணவி ரெம்மான் சடையோ

விரிபிரபை நந்தலை மேல்.

535

குறள் விளக்கம்.



இரவிலே, சுடுகாட்டிலே, பொன்னார் மேனியன் நடனமாடும் போது, அவரது சடாபாரம் எத்திசையினும் விரிந்து பரந்து பிரபை வீசுகின்றதாகக் கூறப்படும். இது நம் தலை நடு கடவுட் ஜோதியின் பிரகாச விளக்கமாம்.



தேகப்பற்றிலாது நிலையில் கடவுட் ஜோதி அனுபவப்படும் இடமே எரிகாடாக இசைக்கப்படுகின்றது. இக்கடவுட் பிரகாச இயல்பைக் குறிக்கவே, தெய்வப் பெரியார்களின் திருவுருவத் தலையைச் சூழ சுடர்ப்பிரபை (Halo light) அமைக்கப்படுகின்றது.