Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.534.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா,

ஐம்பத்து மூன்றாம் அதிகாரம்.

ஐம்பத்து நான்காம் அதிகாரம்.

சோதிச் சின்னம்.

4

கண்டகடற் ஜோதிநேர் கானமயில் மேல்முருகே

விண்டகலப் பொன்னியு மே.

534

குறள் விளக்கம்.

சூரிய உதயத்தைக் கடற்கரையினின்று நோக்கும்போது, நீலக் கடலிலிருந்து எழுகின்ற பொன் வண்ண ஞாயிறு, நீல மயில் மீது முருகன் எழுந்தருளுகின்ற தோற்றமாய் விளங்குகின்றதாம்.

மேலும், இந்நீலக்கடல் பள்ளி கொண்ட திருமாலாகவும், உதய ஞாயிறு அவர்தம் மார்பினிடத்தே தரிக்கப்பட்டுள்ள பொன்னியாம் மகாலக்ஷ்மியாகவும் தோன்றுகின்றதாம்.

நேர் = ஒப்பு, விண்டகலம் = விண்டு + அகலம், திருமாலின் மார்பு.