தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்து மூன்றாம் அதிகாரம்.
ஐம்பத்து நான்காம் அதிகாரம்.
சோதிச் சின்னம்.
|
2 |
ஜோதிலிங்க மாகுமாஞ் சூழுங்கோள் வட்டமே ஓதிய ஆவிடையா யுன்னு. |
532 |
குறள் விளக்கம்.
சுடர்விரி ஜோதி ஞாயிறு இலிங்கமாக விளங்க, அதனைச் சூழ்ந்துள்ள கோள்கள் சுற்றிவரும் விருத்த வட்டம் இலிங்கத்தை ஏந்தியுள்ள ஆவிடையாகக் கருதப்படுகின்றதாம். இவ்வான ஜோதிக் கோள்நிலை, சத்விசாரத்தால் அக ஆன்ம ஜோதியும் அது விளங்கும் பிரணவ வட்ட பீடமாயும் உள்ளதாக அறிந்து கொள்ளலாகும்.
இவ்வுண்மையைக் கற்பிக்கவே, உலகில் பன்னெடுங்காலமாக ஞாயிறு வழிபாட்டுடன் இலிங்க வழிபாடும் ஏற்கப்பட்டு வந்துள்ளன.
Write a comment