Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.528.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்து மூன்றாம் அதிகாரம்.

தெய்வத் திருவுரு.

8

சுத்தவி சாரநெறி சூழாதா விஞ்ஞான்று

மெத்தவுரு பற்றியது வீண்.

528

குறள் விளக்கம்.

புலனின்ப விழைவு மிகுதியால், ஐம்பொறி உடம்பில் பற்றி அதிகரித்து மக்கள் தம் வாழ்வை எல்லாம் வீணாக்கிக் கொள்ளுகிறார்கள். அழியாமையுற்று, ஆனந்தமாய் வாழற்கு, முதலில் அழியுந் தேகப்பற்றறல் வேண்டும். இதற்குச் சத்விசாரம் மேற்கொண்டு, அருளில் நம்பிக்கையும் பற்றும் ஏற்பட்டு உலகப் பொருளில் நிராசையும், தயா நன்முயற்சியும் செய்தல் வேண்டும். இவ்விசார மார்க்கத்தால் தயா வண்ணமாம் அருவுருவப் பேரின்பம் சித்திக்கும்.