Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.524..

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்து மூன்றாம் அதிகாரம்.

தெய்வத் திருவுரு.

4

பலவண்ணச் சத்திப் பயன்பெற் றொழுக

பலதெய்வந் தந்தார் படைத்து.

524

குறள் விளக்கம்.

கடவுள் ஒன்று. அதன் சக்தியாகிய தயவு அனந்த வண்ணமாய்ச் செயல்படுகின்றதாம். ஆகையால் தயா சக்தியாம் தெய்வம் பல வடிவில் ஆக்கப்பட்டுள்ளது. இப்பல தெய்வத் தோற்றம், சத்விசாரம் செய்வதற்கும், உண்மை அறிந்து அவ்வழியில் நடந்து ஞானானந்த அனுபவம் பெறுவதற்குமே யாகும்.

முன்பு, ஞான விசாரம் இல்லாததினால் பல தெய்வப் புற வழிபாடும், சமய மதக் கொள்கை வித்தியாசங்களும் ஏற்பட்டு, அகிலமாம் தயவு நெறிக்குத் தடையாய் இருந்தன. இன்னும் இருக்கின்றன. சுத்த சன்மார்க்கத்தில், சுத்த தயா ஜோதி தெய்வ வழிபாடு இதன் மேல் ஓங்கி விளங்கும்.

P Sujatha
Karunaimigu swamygaluku Thank u.Daeiou is great.
Thursday, July 1, 2010 at 09:24 am by P Sujatha