தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்து மூன்றாம் அதிகாரம்.
தெய்வத் திருவுரு.
|
1 |
மனிதப் பிறப்புருவில் வள்ளலருள் காணுங் கனிவுறலால் தெய்வவுருக் காட்டு. |
521 |
குறள் விளக்கம்.
தெய்வாலய விசாரம் தெய்வ உண்மையைக் கண்டு அடைவதற்கே ஆதலின், அவ்வதிகாரத்திற்கு அடுத்து, தெய்வத் திருவுரு விளக்கும் இவ்வதிகாரம் அமைக்கப்பட்டுள்ளது.
மனிதப் பிறப்பு அல்லாத வேறு எந்தப் பிறப்பு வடிவிலிருந்தும், கடவுள் உண்மையாகிய அருள் அறிவு விளங்குவதில்லை. இந்தத் தத்துவப் பூர்த்தியாகிய மனித வடிவில்தான் அவ்வருள் ஞான பக்குவ நிலை உண்டாகின்றதாம். இதனால், இவ்வடிவில் இருந்துதான் தெய்வானுபவம் பெறலாகின்றது.
இதற்காக இம்மனித ஜீவர்களிடத்தில் கருணை வழிபாடு செய்யவும் நேருகின்றது. இக்கரணங்களால் மனித வடிவங்களில் தெய்வத் திரு உருவங்களை அமைத்துக் கொண்டுள்ளோம்.
காட்டு = மாதிரி, அதாவது இம்மனித உருவமானது தெய்வத்திருவுருவத்திற்கு ஒரு முன் மாதிரி ஆகும்.
மனித வடிவங்களில் தெய்வ திரு உருவங்களை வைத்தற்கான காரணத்தை அருமையாக தயவு குறள் மூலம் வெளிபடுத்தியது நன்று.இந்த திரு உருவங்களை சுத்த தயவு பார்வையில் காண வேண்டும் என்பதையும் எங்களுக்கு சொல்லி கொடுத்து உள்ளீர்கள்.எதையும் விருப்பு,வெறுப்பு இல்லாமல் சுத்த தயவு மாறாமல் தயவு நோக்கோடு கருணையாக காண்பதற்கு அருட்பெரும் ஜோதி ஆண்டவர் துணை செய்ய வேண்டும்.சுவாமிகளே,நீங்கள் எங்களுக்கு எல்லாம் சொல்லி கொடுத்து வந்தாலும் நாங்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் தான் நல்ல அனுபவங்கள் எங்களுக்கு கிடைக்கிறது.சுத்த வெண்மை தயவு அனுபவம் பெறும் நாள் எந்நாளோ அது தான் எங்களுக்கு நீங்கள் சொல்லும் சிறந்த நாள் ஆகும்.-Aruljothisujatha
For Swamy Saravananda’s above Daeiou Song No.521 , explanation is given. Now I want to know from you, Who was given the explanation for the songs lines ? Swamy Saravanananda ? or by you?
PLEASE THE ABOVE YOUR EXPLANATION AND COMMENTS MAY BE COMPAREWITH SWAMY SARAVANANANDA's EXPLANATION;
கோயில்களில் இருக்கும் தெய்வத் திரூ உருவங்களைச் சிறப்பாக எடுத்துக் கொண்டு வழிபட்டு வந்தாலும், அவற்றால் நித்திய சுகானந்த வாழ்வு, இறை அனுபவத்துடன் கூடிய வாழ்வு நமக்குக் கிடைக்கவில்லை.
ஆகவே, இப்பொதுவும், சிறப்பும் நமக்குப் பயன் அளிக்கவில்லை.
FURTHER;
அருட்பெருஞ்ஜோதி அட்டகம் (பாடல்.4 உரை) given by Swamy Saravanananada.
".......வெளியில் எங்கெங்கோ, எப்படி எல்லாமோ தெய்வ வழிபாடு செய்தும் பெற முடியாத அக அனுபவமும், புற அனுபவமும் சேர்ந்த ஆனந்த வாழ்வை நாம் எப்படிப் பெறுவது என்கிற வாய்ப்பு இப்போது நமக்குக் கிடைத்திருக்கிறது.
திரு அருட்பிரகாச வள்ளலாருக்கு முன்னால், கடவுளின் அருள் உண்மையை, யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.
உயிருக்கு உயிராக இருந்து நம்மை இயக்கும் கடவுளை அவர் எங்கோ வெளியில் இருக்கிறார் என்று எண்ணியிருந்தார்கள். அதனால் அவர்கள் எண்ணியபடி அவர்களுக்கு இறை அனுபவம் கிடைக்கவில்லை. நம் உள் இருந்து நம்மை இயக்குபவர் இறைவன்தான் என்பதை வள்ளலார் தம் அருள் நிறை அனுபவத்தால் அறிந்து நமக்குச் சொல்லி இருக்கிறார்.
நம் உள் இருக்கும் இறைவனோடு நாம் ஒன்றி இருந்து செயல்படும்போது அவர் உள்ளும் புறமுமாக, அனகமாக விரிந்து இருந்து நமக்கு வாழ்வு அளிக்கிறார்.
இதுதான் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம் தெரிவிக்கும் உண்மையாகும். அவருடைய அனுபவமும் ஆகும்.
and alos in அருட்பெருஞ்ஜோதி அட்டகம் (பாடல்.5 உரை):
வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி வெளிப்படுவதற்கு முன்னால் வாழ்ந்த ஞானிகள், திருவருளை முழுவதும் அறிந்து கொள்ளவில்லை. புற நோக்காக ஓரளவு அறிந்திருந்தார்கள்.
அவர்கள் திரு அருள் அறிவு, நிறைவு பெறாததால், ஏதேதோ கற்பனையில் கடவுளை உருவாக்கினார்கள். அந்தக் கற்பனைக் கடவுளைப் போற்றி வணங்கி வந்தார்கள். மற்றவர்களையும் வணங்கச் சொன்னார்கள்.
முடிவில் எல்லோரையும் போலவே அவர்களும் மறைந்து போனார்கள்.
வள்ளலாரோ திரு அருளால் கடவுளின் முழு உண்மையும், தம் உள்ளேயே இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டார். தம் புருவ மத்தியில் இருக்கும் உண்மைக் கடவுளான அருட்பெருஞ் ஜோதி அரசரின் முன் ஒருமையுடனும் உள நெகிழ்வுடனும் பிரார்த்தித்து வந்தார்.
அவருடைய அறியாமை என்னும் திரைகள் விலகின. அவர் உள்ளே ஒளி வீசிக் கொண்டிருக்கும் அருட்பெருஞ் ஜோதியுடன் ஒன்றி அதுவாகவே நின்றார்.
தாம் கண்டு அனுபவிக்கும் இந்த அருட்பெருஞ் ஜோதி காட்சியைத்தான், வடலூரில் சத்திய ஞான சபையாக அமைத்து இருக்கிறார்.
and also in Song No.3, Swami Saravanananda explains as follows:
மெய், வாய், மூக்கு, கண், காது என்னும் ஐம்பொறிகள், மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கு கரணங்கள், இவைகள் இயக்குவதற்கு அடிப்படையாக இருப்பது உயிர் உணர்வு. இவைகளால் எல்லாம் மனிதன் இறைவனைக் கண்டு அனுபவித்துவிட முடியாது.
வித்தை முதலிய ஆன்ம தத்துவங்களாலும் இறைவனை அறிந்து அனுபவிக்க முடியாது.
and also available in S.No.2;
எல்லாப் பொருள்களிலும், எல்லா உயிர்களிலும் உள்ளும் புறமும் இயற்கை உண்மையின் விளக்கமாக மெய் அறிவு இன்ப வடிவமாக நடம் புரிகிறார் அருட்ஜோதி ஆண்டவர்.
இவர்தான் உண்மையான கடவுள். இதை நீ உணர்ந்து கொள்ள வேண்டும்.
நீ, கடவுள் ஒருவர்தான் என்பதை உணர்ந்து கொள்ளாமல், இதுவோ அதுவோ ஒன்றோ பலவோ என்று தடுமாற்றம் அடைந்து கொண்டிருக்கிறாய்.
சிவ தத்துவம் என்கிற ஈஸ்வரம் முதலிய ஐந்து தத்துவங்களாலும் இறைவனை அடைந்து அனுபவிக்க முடியாது. மேலே குறிப்பிட்ட தத்துவங்கள் எதனாலும் இறைவனை அடைந்து அனுபவிக்க முடியாது.
I THINK IT IS ENOUGH FOR YOUR KIND CONSIDERATION.
KINDLY REALIZE THE TRUTH OF GOD FOUND BY RAMALINGA VALLALAR IN HIS MARGA.
How are you? Four/three times I met you. Your work is great but at the same time I want to point out some here as no comments place given in your article namely " Visit of Karnataka Sanmarga Association Members to Vallalar Org Foundation, Narayanapuram."
“Our Swamy Ramalinga prescribed the qualification for Suddha Sanmargees.
They are;
“ those who have get rid-off religions and religious practices which are constrains to Ramalinga’s marga only called as Suddha Sanmarga Anbarkal. But at the same time, they, who are not our sanmarga’s sanmargees, are in position to realize our principle which is common to all and they are also our BROTHERS.”.