தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்திரண்டாம் அதிகாரம்
தெய்வாலய விசாரம்.
|
10 |
தெய்வவழிபாட்டிற்குச் சீவவுரு வாலயம் செய்கருணை யொன்றே சிறப்பு. |
520 |
குறள் விளக்கம்.
கடவுள் ஆன்மா காரியப்படும் இடம் சீவ தேகமாய் உள்ளது. ஆதலின், இத்தேகமே கடவுளுக்கு அகப்புறக் கோயிலாக விளங்குவதாம். இதனால், சீவர்களுகட்குத் தயவோடு உயிர் விளக்கமும் அறிவு விளக்கமும் உண்டு பண்ணும் கருணைச் செயல் புரிவதொன்றே உண்மைக் கடவுள் வழிபாடாகும்.
இந்தச் சீவகாருண்ய வழிபாடு செய்வதன்றி புற ஆலயங்களிற் சென்று தயவில்லாத வெற்று ஆடம்பர வந்தனை வழிபாடுகள் செய்வதினால் பெரும்பயன் உண்டாகாதாம்.
ஜீவகாருணியம் தான் கடவுள் வழிபாடு என்னும் வள்ளலார் வாழ்வினை தயவு குறளில் வெளிபடுத்தியது
அருமை.ஆடம்பரமாக செய்யும் அன்னதானம்,அபிசேக ஆதாரனைகள்,பக்தி என்னும் பெயரால் செய்யும்
விரதங்கள்,சடங்கு சம்பிரதாயங்கள்,உயிர் பலிகள் நமக்கு துன்பத்தை தான் கொடுக்கும் என்பதால் உண்மையான அக வழிபாடும், பிறர் பசியை தயவு வழியில் போக்குவதே கடவுள் வழிபாடு. என்பதை உணர வைக்கிறது இக்குறள்.-அருள்ஜோதி சுஜாதா