Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.519.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்திரண்டாம் அதிகாரம்

தெய்வாலய விசாரம்.

9.

ஒழிவில் கடவுட் கொழிவில் தளியா

மழவிலா ஆன்மா அறி.

519

குறள் விளக்கம்.

கல்லாலும் மண்ணாலும், பொன்னாலும், மணியாலும் அமைகின்ற கோயில்களும், மனோ, மொழி, மெய்யில் கற்பனை செய்யப்படும் கோயில்களும், அவற்றில் நிலை பெறுத்தப்படும் கற்பனா சிற்பத் தெய்வத் திருவுருவங்களும் இயற்கை உண்மைக் கடவுள் ஆகாது.

நீங்காது நிலையாய் உள்ள தளியும் கடவுளும் நமது ஆன்மாவின் கண்ணதாம். ஆனால் இவ்வான்மா அணுத்துவமாய் அருகி உள்ளது. இதன் கண்ணின்று கடவுட் சக்தி அருவுருவ அருண்மயமாய் விரிந்துள்ளது இம்மனித ஜீவ தேகத்தில். ஆதலின், இத்தேகமே தேவாலயமாகப் போற்றப்படல் வேண்டும்.