Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.517.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்திரண்டாம் அதிகாரம்

தெய்வாலய விசாரம்.

7.

வியன்கொண்ட ஆன்ம விசாரத்தா னோக்க

மயன்கண்ட சிற்பகலா மன்று.

517

குறள் விளக்கம்.

லலித கலைகளின் சிறப்பெல்லாம் கொண்டு விளங்கும் பெரிய கோயில்கள், மயப் பிரம்ம சிருஷ்டியாக மொழியப்படும். மனோ கரண புலன் அறிவால் நோக்கி மயங்கி நிற்பதற்காக அல்ல இந்த ஆலயங்கள்.

பெருமையும், பெரு நன்மையும் வழங்கும் ஆன்ம ஞான விசாரத்தோடு, அருள் உணர்வால் இவற்றை நோக்குதல் வேண்டும்.

இவ்வாறு நோக்குவதால், அருள் உண்மை வெளிப்பட்டு, நிலையான பெரிய இன்பத்தை நல்கும்.

P Sujatha
கருணைமிகு சுவாமிகளுக்கு,
வணக்கம். உங்களை போன்ற பெரியோர்கள் கூறும் நல் தெய்வ வார்த்தைகளை இன்று நாங்கள்
உணராது போகலாம்.ஆனால் ஒருநாள் நாங்களே அறிந்து கொள்ளும் காலம் வரும் போது உண்மையை
கண்டு கொள்ளுவோம். இது சத்தியம்.வள்ளலாரின் அருட்பாவாயே இன்றும் கூட தெய்வீக பாடல்களாக
பலரும் ஏற்க வில்லை.எனினும் உங்களை போன்ற பெரியோர்கள் மனம் சலிக்காது கடவுள் உண்மை
விளக்கத்தை வள்ளலார் வழியில் ஆண்டவர் வழங்கிய சுத்த சன்மார்கத்தை சுத்த தயவு என குறிப்பிட்டு
உயர்வு படுத்தி எங்களுக்கு வழங்கி உள்ளீர்கள்.சுத்த சன்மார்க்கம் இன்று விளங்குவதால் புற ஆலயங்களும்
ஆன்ம உணர்வில் காணலாம்.இதில் யாதும் தடை இல்லை. தயவு.vallalar wishes-aruljothisujatha.
Monday, June 21, 2010 at 23:19 pm by P Sujatha