Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.516

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்திரண்டாம் அதிகாரம்

தெய்வாலய விசாரம்.

6.

யோகா திசய உபாயத்தாற் பத்திநெறி

மோகந் தழைத்தது முன்பு.

516

குறள் விளக்கம்.

ஜன சமூகத்தில், கல்வியறிவு நிரம்பாது குறைவு பட்டிருந்தபோது, சத் விசாரமின்மையால், கோயில் வழிபாடு மூட பக்தியால், காமியார்த்த சித்தியின் பொருட்டே செய்யப்பட்டது. பெரியோர்களின் யோக சாதனா தந்திரத்தால், இவ்வழிபாட்டு முறையில், பொது ஜனங்கள் மிகக் கவரப்பட்டனர்.

இப்போது, இந்த ஆலயங்களில், சத்விசாரத்தால் உண்மை அறிவுடன் அன்பு வழிபாட்டினை நாம் வளர்க்கச் செய்ய வேண்டியுள்ளோம்.