Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.515.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்திரண்டாம் அதிகாரம்

தெய்வாலய விசாரம்.

5.

பக்திவழி பாட்டாற் பரவினோர்க் கவ்வளவே

சித்திபெறக் காண்கரும சித்து.

515

குறள் விளக்கம்.

பக்தியின் சக்தி, மன ஓர்மையோடு கூடிய நம்பிக்கையின் அளவே விளங்குவது. கரும சித்தர்கள் தோற்றுவித்துள்ள கோவில்களிற் சென்று, நம்பிக்கையுடனும், பக்தி சிரத்தையுடனும் வழிபட்டு, தான தருமங்கள் செய்வோர் தாம் வேண்டுவதை ஓரளவு பெற்று உள மகிழ்வடைகிறார்கள்.

இது அக்கரும சித்தர்களின், அற்புத சக்தியாலும், பக்தர்களின் இச்சா சக்தியாலும், கிடைக்கப் பெறுகின்ற நன்மைகளாம். ஆனால், இவை யாவும் சுத்த தயவினால் பெறும் ஆனந்த அனுபவத்திற்கு எவ்வகையிலும் ஈடாகாது.

P Sujatha
கருணைமிகு சுவாமிகளுக்கு, ஆமாம்.பக்தியால் மன ஒருமையை பெறலாம்.ஆனால் சுத்த சன்மார்கத்தினால் தான் ஆன்ம ஒருமையை பெற முடியும்.அதுவே என்றும் ஆனந்தம்.ஆன்மா பெறுகிற முடிவே ஆனந்தம்.
Saturday, June 19, 2010 at 05:20 am by P Sujatha