தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்திரண்டாம் அதிகாரம்
தெய்வாலய விசாரம்.
|
3. |
நான்பிரம மென்றுரைத்த நாதாக்கள் காண்கோயில் ஊந்தேகப் பற்றை யுடைத்து. |
513 |
குறள் விளக்கம்
ஆன்மாவாகிய தானே கடவுள் என்ற ஞான அனுபவ சித்தியைக் கொண்டு, அற்புதம் பல இயற்றும் நவநாத சித்தர்கள் முதலியோர் தோற்றுவித்த சிற்பக்கலை வளர் கோயில்கள் பல உள்ளன. இவ்வாலயங்கள், ஆன்மக் கடவுள் விக்கிரகத்தை மூலஸ்தானத்திற்குக் கொண்டு புறத்தே சூக்கும, தூல, தேக நிலையைக் குறிக்கும்படி கட்டப்பட்டுள்ளன.
சுத்த சன்மார்க்கம் அறியப்படாதவரை, இவ்வாலயங்கள் தேகப் பற்றொடு பக்தி செய்யும்படி அல்லது தேகப்பற்றை உடைத்துத் தகர்த்துத் துறந்து ஆன்மாவில் ஒடுங்கிப் போகும்படி மாந்தர்களைத் தூண்டுகின்றனவாம்.
இது சமயம், சுத்த சன்மார்க்கம் உதித்துள்ளதால், இவ்வாலயங்களின் உண்மையை அகத்தில் கண்டு கொண்டு, மெய் அறிவும் அன்பும் வளர் இடங்களாக அமைத்துக் கொள்ளலாம் அவ்வாலயங்களை எல்லாம்.