தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்திரண்டாம் அதிகாரம்
தெய்வாலய விசாரம்.
|
1. |
கடவுள் விசாரங் கரம்பெறற் கான இடங்கோயி லென்றே இசை. |
511 |
குறள் விளக்கம்.
அகத்திலங்கும் நம் தெய்வ நூலின் சாரத்தை நன்கு ஆய்ந்து தெளிவதற்கு புறத்துணையாக உள்ளவை, அருள் நூல்களும் அவற்றை விளக்க வந்த தெய்வ ஆலயங்களுமாம். ஆதலால், இங்கு தெய்வாலயத்தைப் பற்றிய அதிகாரம் எடுத்து விரிக்கப்படுகின்றது.
கடவுள் உண்மையை, ஒருமையோடு இருந்து விசாரம் செய்து அறிதற்கு, ஓர் அரிய புறத்துணைக் கருவியாக உள்ளது தெய்வ ஆலயம் ஆகும். இந்த ஆலய விளக்கமும், வழிபாட்டு ஒழுக்கமும் தெரிந்து தெளிவதற்கே முன் கூறிய தெய்வ நூல்களும் உதவுவனவாம். பல நெடுங்காலம் படித்து அறிவதற்கு இயலாத தெய்வ தத்துவத்தை எளிதில் கல்லார்க்கும், கற்றவர்க்கும் புகட்டி விட வல்லது சிறந்த தெய்வ ஆலயம்.
Write a comment