Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.510.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தோராம் அதிகாரம்.

தெய்வ நூற் சாரம்.

10

நந்நூ லுளங்காட்டி நாதனருள் கூட்டுகிற

அந்நூலே தெய்வநூ லாம்.

510

குறள் விளக்கம்.

தெய்வம் என்பது தயா தத்துவம். ஆதலின், ஜீவ தயவை உண்டு பண்ணி, கடவுள் தயவை அடைவிக்கின்ற நூல் எதுவோ அதுவே தெய்வ நூலாக இயம்பப்படுகின்றது.

நமது உள்ளத்திலே மறைந்து கிடக்கின்ற கடவுட் ஜோதியே, நம் உள்ளொளி, உண்ணூல், முதல் நூல், நந்நூலுமாகும். இந்த நம் நூலையும். இதன் இயல் உண்மைத் தன்மையையும் விளக்கிக் காட்டி கூட்டி வைக்கின்ற அருண்மொழி நூல்கள் யாவும் தெய்வ நூல்களாக அறியப்படும்.