Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.507.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தோராம் அதிகாரம்.

தெய்வ நூற் சாரம்.

7.

கல்லெல்லாந் தெய்வக் கருணையுரு வாகாவாங்

கில்லாகும் பன்னூற் கிசை.

507

குறள் விளக்கம்.

உலகில் எத்தனையோ கற்கள் இருக்கின்றன. அவைகள் யாவும் கருணை வளர்க்கும் கடவுள் திருவுருவங்கள் ஆகிவிடுமா ? ஆகாது. அதுபோல் உலகில் உரைக்கப்பட்டு விளங்குகின்ற பலவாகிய நூல்களும் புகழ்பெற்று வயங்கி இறையின்பப் பெரும்பயனை வழங்கி விடாவாம்.

துதித்தற்குரிய தெய்வ சிற்பத் திருவுருவும், ஓதற்குரிய அருள் ஞான நூலும், அன்பையும் அறிவையும் பெருக்கி கடவுள் நிலை எய்தச் செய்யும்.

ஆகா, ஆங்கு = என்பதிலுள்ள ஆங்கு என்பதற்கு அவ்வாறு, அங்ஙனம், போல் எனப் பொருள் கொள்ளலாம்.