Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.506.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தோராம் அதிகாரம்.

தெய்வ நூற் சாரம்.

6.

அடிமுடி காணா அருட்ஜோதி நூல்கோத்

திடிவற நிற்கு மிறை.

506

குறள் விளக்கம்.

சொற்பிரபஞ்சமாகிய உலகமெல்லாம் அருள் ஒளியின் செறிவாகும். ஆதலின், அவ்வருள் ஒளியின் உருவாயதே இவ்வுலகப் பொருள்கள் யாவும். இவற்றிற்கெல்லாம் உள்ளீடாய் சத்தியாகிய இறைவன் நித்தியமாய் நிலவி நின்று ஆதியும் அந்தமும் அறிய முடியாதபடி விளங்குகிறது.

இவ்விறை நூலில் கோர்த்த ஜோதி மணிகளே அணு முதல் அண்டாண்ட கோடிகள் எல்லாம். சுத்த தயா விசாரத்தால் தான் அவ்வுள் நூலாம் கடவுள் சத்து வடிவைக் கண்டு கற்றுப் பயன் பெற முடியும்