Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.505.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பத்தோராம் அதிகாரம்.

தெய்வ நூற் சாரம்.



5.

நூலும் மொழியு நுவலரு மெய்ப்பொருளை

ஏலுமருள் சார மிதற்கு.

505

குறள் விளக்கம்.



எந்த நூலும், அந்நூல் மொழியும் இதுதான் பரம் பொருள் எனக் காட்டிவிடாது. உண்மை ஞானத்தை விளக்க வந்த ஓர் உபாயக் கருவியே மொழியும் நூலும்.

மொழியறிவு பெற்றவர்கள் இவ்வுபாய ஞானத்தால், உண்மை ஞானப் பொருளாகிய கடவுள் இயலை உணர்ந்து, அருள் ஞானமாகிய அனுபவம் பெற வேண்டும். இவ்வருள் ஞான அனுபவமே மெய்ந்நூலின் சாரமாகும்.