தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தோராம் அதிகாரம்.
தெய்வ நூற் சாரம்.
|
3 |
கற்பனா சாலக் கதைநூற் கணழுந்தா நற்பதி நூலையே நாடு. |
503 |
குறள் விளக்கம்.
கதை என்றலே, வெறும் புனைந்துரை, பொய், கற்பனைச் சங்கதிகளாம். ஆதலால் உண்மையை உள்ளவாறு உணர்த்தாது கற்பனையாகப் புனையப்படும், சிறுகதை, பெருங்கதை, புராணக்கதை முதலியனவும் புறவாழ்வு வரலாற்றுச் சரிதங்கள் முதலியனவும் உலக விடயத்தில் மனத்தைச் சுழற்றி உணர்ச்சி வசப்படுத்துவனவேயாம்.
ஆதலின், அவற்றில் நாட்டம் செலுத்தாது, கடவுள் அறிவையும் மெய்யன்பையும் வளர்க்கும் தெய்வ நூல்களை ஓர்ந்து ஓதித் தெளிதல் வேண்டும்.
உண்மை காணும் இலட்சியத்தோடு உலகையும் உலகியல் நூல்களையும் மேல்வாரியாகப் பார்த்துக் கொண்டு போனால் உள்ளத்தில் மெய்யொளி ஓங்கும். மற்றபடி உலக நூல்களில் பற்று வைத்து ஓதி அவற்றிலே அமிழ்ந்தாலும், அவற்றை முற்றும் வெறுத்து தீண்டாது சோம்பியிருந்தாலும் உள்ளொளியோங்காது.