தயவுக்குறள்.
சுவாமி சரவணானந்தா.
ஐம்பத்தோராம் அதிகாரம்.
தெய்வ நூற் சாரம்.
|
2 |
இயலுண்மை யோடறி வின்பமெலாங் காட்டுந் தயவொன்றே தெய்வநூற் சாறு |
502 |
குறள் விளக்கம்.
எந்தக் கடவுள் தயவு சச்சிதானந்த அனுபவத்தைக் காட்டுக் கூட்டி வைப்பதோ, அதுவே தெய்வ நூலின் சாரமாகும். ஏனெனில், தெய்வம் என்பது தயவின் நிறைவே ஆகி பிரபஞ்சம் முற்றிலும் செழித்து நின்று இயங்கி சத்து சித்து ஆனந்தத்தை வெளிப்படுத்துகின்றதாம்.
ஆதலின், இப்படிப்பட்ட அனுபவம் தரும் சிறந்த நூலே தெய்வ நூலாகக் கூறப்படும். ஈதல்லாத புலன் இன்ப அனுபவத்தை வளர்க்கும் நவரச நூல்கள் யாவும் உண்மை தெய்வ நூல்களாகாது.
Write a comment