Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.500

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பதாம் அதிகாரம்.

அகக் கல்வி நிலையம்.

10.

அலைவற் றகத்தே யருளா னிலைத்து

கலையெலாங் கல்லாது கல்.

500

குறள் விளக்கம்.

பிரபஞ்ச இரகசியத்தைக் கடவுள் அருட் கண்ணால் உண்ணின்று நோக்குதல் வேண்டும். இவ்வருளனுபவம் உண்டாக்குவதற்காகவே உண்மை விளக்கும் செயல்கள் புரிதல் வேண்டுமேயல்லாது, புலன் மயக்கும் கற்பனைக் கலைகளைப் பெருவாரியாகப் படைத்தல் கூடாது.

அருள் நோக்கு உண்டானால், கலை உரைத்த கற்பனைக்கு உள்ளீடாய் மறைந்து கிடக்கும் இறை உண்மை எல்லாம் வெளிப்பட்டு, இலங்கி, நல் அனுபவம் வழங்கும். அருளால், ஓதாது உணர்கின்ற உண்மையே கல்லாது கற்கும் மெய்ப்பொருட் கல்வியாம்.