Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.499.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பதாம் அதிகாரம்.

அகக் கல்வி நிலையம்.

9.

கலையினா லுள்ளங் கலைவதே யன்றி

நிலையுறா மெய்யரு ணேர்ந்து.

499

குறள் விளக்கம்.







அற்புத உலகின் தோற்றமெல்லாம் காண வேண்டி, பொறி புலன் அடக்கி ஒருமையால் நோக்கினோர்க்கு புற உண்மை பல புலனாகின்றன. அவ்வுண்மை சேர் ஒளியில் கற்பனை மனத்தைப் படரவிட்டு, கலை அனந்தம் புனைந்தனர் அக்கலை ஞானிகள்.







அகநிலை உறாத போது, அப்பலவாகிய கலைகளால், உள்ளம் கலைந்து, மனம் அலைந்து, வாழ்வு குலைந்து போகின்றதே அல்லாது, அருள் ஒளி நிலையில் புலையற நின்று உலைவற வாழக்கூடாது போகின்றதாம். ஆதலின், மெய்யருள் பெறவே உண்ணின்று கற்க தயவுக் கலையே.