Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.498.

தயவுக்குறள்.

சுவாமி சரவணானந்தா.

ஐம்பதாம் அதிகாரம்.

அகக் கல்வி நிலையம்.

8.

இலைக்குடிலிற் றங்கி யிருந்து பல கற்றார்

கலைக்கொடியிற் பூத்ததேது காண்.

498

குறள் விளக்கம்.

உலக இரைச்சலிலிருந்து விலகி, குருகுலங்களில் தங்கி, குரு சீட முறையில் பலநாள் பல கலைகளை கற்று ஆய்ந்து தெளிந்து கொண்டவர்கள் பெற்ற பயன் பெரிதோ ?

அருள் நிலை பெறா விசார ஞானத்தால் கண்ட சாத்திரங்கள் பலவே பூத்தன. அக்கலைக் கொடியில், அமைதியான, ஆஸ்ரமங்களில் தங்கி, தயா ஒருமை வளர்த்து, அகக்கல்வி நிலையமாம், ஆன்மத் தளியில் அமர்ந்து அருள் வாழ்வு அடைந்திருந்தால் பெரும் பயன் பெற்றிருக்கலாம். இப்படி உயர் ஞானத்தால் “சாகாக் கல்வியைப் பெறுவதே” இப்பிறப்பின் பயனாம்.