தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
ஐம்பதாம் அதிகாரம்.
அகக் கல்வி நிலையம்.
|
5. |
சிரநடு வத்தியுரு சிற்பிகைத் தீண்ட பிரணவ மூர்த்திதலைப் பெய். |
495 |
குறள் விளக்கம்.
ஆன்ம ஒளி விளங்கு இச்சிரநடு எலும்புக்கூடு யானை முக விநாயக வடிவம் கொண்டுள்ளது. இப்பிரணவ மூர்த்தி வடிவம் இயற்கையானது. சிற்பியின் கைபுனைந்து இயற்றாப் பொல்லாப் பிள்ளையாராகும் இது. மனிதனேயல்லாது. முதுகெலும்பு நன்கு வளர்ச்சி பெற்ற மற்ற விலங்கினத்தின் தலையுள்ளும் இக்கஜமுக கணபதி வடிவம் உருவாகி உள்ளது.
அருள் விசாரம் செய்து, ஆன்ம ஒளி நிலை எய்த அறிவு வளர் கணபதிக்கு அன்பு செய்து ஆருயிர்களைக் காத்தல் வேண்டும். உயிர்க் கொலையும், பிள்ளையார் வடிவச் சின்னங்களை உடைத்தலும், பாவம்.
Write a comment