தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
ஐம்பதாம் அதிகாரம்.
அகக் கல்வி நிலையம்.
|
4. |
கருவி லுருவாங் கணமுதலே யான்மா மருவுஞ் சிரநடு வைத்து. |
494 |
குறள் விளக்கம்.
இந்த ஆன்மாலயம் திறக்கப்பட்டுள்ள இடம், நம் தலை நடு தலத்தே உள்ளதாம். இது நம் கருவுரு சிருஷ்டி தொடங்கிய காலத்தே அணுமாத்திரமாய் திகழ்ந்து, பின்னர் பிரணவாகாரச் சிற்றுருவில் வளர்ந்து, கருப்பிண்ட வடிவில் தலைநடு ஓங்கார மூளையின் மீது ஒளிவிட்டு நிலவுகின்றதாம். ஆதலின், இச்சத்விசார ஆன்ம நிலையம் வெளிப்பட்டுள்ள இடம் உச்சியுள் இருப்பதை அவ்விசாரத்தாலேயே உணர்ந்து அடைதல் வேண்டும்.
Write a comment