Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.493

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

ஐம்பதாம் அதிகாரம்.

அகக் கல்வி நிலையம்.



3.

ஆன்மகுரு தங்கி அருளறிவு வூட்டிவளர்

வான்பதி கிஃதே வழி.

493

குறள் விளக்கம்.



கடவுளே நமது ஞான குருவாய் எக்காலத்தும் இருந்து கொண்டு நமக்கு அருள் ஞானம் புகட்டி பக்குவப்படுத்திக் கொண்டுள்ளார். அவர் இருக்கும் அத்தலம், சிதாகாசம், சிதம்பரம் அல்லது ஞானாகாசம் என்று சொல்லப்படும். அத்தலத்திற்கு செல்லும் மார்க்கம், இந்த விசார வழியே ஆகும். சுத்த தயா நெறியே அகக் கல்வி நிலையத்திற்கு செல்லும் மார்க்கமும் துணையும் ஆகும்.