Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.492.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

ஐம்பதாம் அதிகாரம்.

அகக் கல்வி நிலையம்.

2.

விசாரித் தறிதற்கு மேவிய ஆன்ம

நிசாலயங் கண்டுண் ணிலவு.

492

குறள் விளக்கம்.

சத்விசாரக்கல்வி கற்க, அக ஆன்ம நிலையத்திற்குள் சென்று ஒருமையோடிருத்தல் வேண்டும். ஆன்மாலயமே உண்மை அறிவு வளர் கோயில். இது இருக்கும் இடம் அறிந்து அடைவதற்கு அருள் உடையார் துணை வேண்டுமேயன்றி, மற்றவர்களின் உதவியும், சிபாரிசும் செல்லாவாம். மேற்படி அருள் துணையோடு தயாவொழுக்க பக்குவ மனம் உடையார்க்குத் தானே வந்தடையும்.