தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தொன்பதாம் அதிகாரம்.
அண்ட பிண்ட விசாரம்.
|
7.
|
அண்டமெலாம் பிண்டமெலாம் ஆக்கி யளித்தழித்துக்
கொண்டுளான் ஆன்ம குரு.
|
487
|
குறள் விளக்கம்.
ஆன்ம குரு என்பது, ஆன்மாவின் கண்ணுள்ள அருட் சோதியாம் இறைவனைக் குறிக்கின்றது. இப்பதியே இங்கிருந்து கொண்டு அகிலாண்ட கோடிகளையும், அவற்றின் சராசர உயிர்ப்பிண்ட கோடிகளையும், சிருட்டி, திதி, சங்காரம் செய்து கொண்டுள்ளதாம்.
இந்தக் குரு பதியை அறிந்து அருள் உணர்வு பெற்று, அங்கு அவரோடு இருந்து கொண்டு, அண்ட பிண்ட செயல்களை உள்ளவாறு கண்டிருப்பதே குருவருள் அனுபவமாம்.
Write a comment