Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்-483

தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தொன்பதாம் அதிகாரம்.
அண்ட பிண்ட விசாரம்.

3.
அண்டன் அருட்சோதி யாகி யகமுறையப்
பிண்டங்கொள் ளிந்தப் பிறப்பு.
483

குறள் விளக்கம்.
நமது அகமுடையான் அருட்சோதி சக்தியாய் அகத்தே கண்டு கொள்ளப்படவும், அப்படிக் கண்டு நாம் அதுவாகி என்றும் உள் இருந்து உறையவும் என்றே, இம்மனிதப் பிண்ட தேகப் பிறப்பு கிடைக்கப் பெற்றுள்ளோம். இப்பிண்ட தேகத்துடன் இருந்துதான் அண்டனைக் கண்டு அடைய, அப்பதியின் திருவருள் இப்பிறப்பில் வழங்கப்பட்டுள்ளோம்.