Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.480.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தெட்டாம் அதிகாரம்.

ஆன்ம விசாரம்.

10

உடலுரு நாமென் றுணருபொய்ப் பாவனைபோய்

அடலான்மா நாமாத லாய்வு.

480

குறள் விளக்கம்.

தேகத்தை நாமாக மதித்து உலகியல் வாழ்வில் அகங்கரித்து அல்லல்பட்டு அழிவுறுவது வாழ்வில் பெரும் தோல்வியாம். ஆன்மாவிற்கு நட்டமாம். இது “நாம் இத்தேகம்: என்ற பொய்ப்பாவனையால் ஏற்படுவதாம்.

இதனை விடுத்து, வன்மை மிக்க அல்லது அழியாமை உடைய ஆன்மாவே நாமாக உள்ள உண்மையை விசாரித்து அடைவதுதான் வெற்றி தரும் ஆன்ம விசாரம் என்பது. இதனால் உண்டாவது பெருவாழ்வும் ஆன்ம இன்ப இலாபமும் ஆகும்.