Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள்.எண்.476.

தயவுக்குறள்



சுவாமி சரவணானந்தா.



நாற்பத்தெட்டாம் அதிகாரம்.



ஆன்ம விசாரம்.



6.

ஊண்விடுத் தோடா துயிர்ப்படக்கிப் பாவகத்தால்

ஆன்மாவை பற்றப் படா.

476

குறள் விளக்கம்.



உணவு கொள்ளாது பட்டினி கிடந்தும், மூச்சுக் காற்றைப் பிராணாயாமம் முதலியவற்றால் அடக்கி நின்றும், “ஆன்மா நான்” என்று பாவனா நிஷ்டை கூடி பழகி வந்தாலும், அவ்வான்மானுபவம் சித்திப்பது கிடையாது.



ஆன்மாவை உண்மை விசாரத்தால் பற்றிக் கொண்டு அவ்வக உணர்வு அறாது தயவுப்பணி புரிந்து கொண்டிருப்பதுவே ஆன்ம விசாரம் என்று அறிதல் வேண்டும்.