Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.472

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தெட்டாம் அதிகாரம்.

ஆன்ம விசாரம்.



3.

எண்ணிலி கோடி இறைதரு தேயமெலாம்

பண்ணிய சஞ்சாரம் பார்.

473.

குறள் விளக்கம்.

இவ்வான்ம விசாரத்தினால், ஆன்மா பலவேறு தேகங்களைச் சென்றடைகின்றதோ அல்லது ஆன்மாவின் மீது பலவேறு தேகங்கள் வந்து வந்து செல்கின்றனவோ என்ற உண்மை விளங்கும். ஆன்மாவினின்று உயிர்ச்சக்தி புறப்பட்டு தேகக் கவசத்தை ஆக்கிக் கொண்டு சில காலம் வளர்ந்து விட்டு ஒடுங்கி விடும். அப்போது ஆன்மாவினின்று தேகம் பிரிந்து விடுகின்றது. மறுபடியும் கடவுள் ஆணையால் அவ்வான்மாவுக்கு ஜீவ தேகம் உண்டாகின்றது.

இதனால், தேகங்களே ஆன்மாவுக்கு மேல் வந்து போகின்றதே உண்மையாம். ஆன்மாவானது இறைவனின் அளவிலா ஆற்றலை அனுபவ பூர்வமாய் அறிந்து அடைவதற்காகவே இந்த தேக சஞ்சாரம் ஏற்பட்டுள்ளதாம்.

தேயம் என்பது தேசம் அல்லது நாடு எனப் பொருள்படும்போது, மனிதன், கடவுளின் புற வண்ண தெய்வீக ஆற்றல்களைக் காண, பக்தியொடு பல தேய சஞ்சாரம் செய்து வழிபடலாகும் உண்மையை உணர்த்துகின்றதாம்.

P Sujatha
Karunaimigu Saravanaththa swamygaluku,
Thank u Very much. I like it ur all Daeiou Kurals.Each and every kural words are given
good suddha sanmargam.Really wonderful.unmai jeevakaruniya anbargal ethai unarver.
Tuesday, May 4, 2010 at 03:05 am by P Sujatha