தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தெட்டாம் அதிகாரம்.
ஆன்ம விசாரம்.
|
1. |
அருட் சித்தாற் சிற்றணுவாய் ஆன்மா வெனனின்(று) உருப்பெற்ற வொன்றதனி லொன்று. |
471. |
குறள் விளக்கம்.
முன் கொண்ட அருள் விசாரம் நிலைத்து வளர்கின்ற இடம் ஆன்மாவாகும். ஆதலின் அவ்வான்மாவின் கண்ணின்றே விசாரம் செய்ய வேண்டி இவ்வதிகாரத்தில் ஆன்ம விசாரம் தெளியப்படுகின்றதாம்.
ஆன்மாவானது சிற்றணுவாகவும், அருட் சித்தால் உயிருடம்பில் விரிந்து விளங்குவதும், சுருங்கி ஒடுங்குவதுமாக உள்ளதாம். இதனால் இந்த ஆன்ம அணு நிலையைக் கண்டு, அதிலே பொருந்தி நின்று அதுவே ஆகிவிடுதல் தான் உண்மையான் ஆன்ம விசாரம் ஆகும். இப்படி ஆன்ம வடிவு எய்தி ஆன்ம நெகிழ்ச்சியாம் தயவோடு ஒழுகுதல் ஆன்ம விசாரச் செயல் ஆகின்றது.
Write a comment