Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.470.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தியேழாம் அதிகாரம்.

அருள் விசாரம்.



10

தயாசோதி பற்றித் தனித்துண் ணிலவி

நயாசோதி வாழ்வை நடத்து.

470

குறள் விளக்கம்.

அருள் விசாரத்தால் அக நிலைத்தல் முதற் செயலாகும். அவ்வக நிலை நின்றே உலகியலை நடத்தல் வேண்டும். இவ்வுலகம், ஐவண்ண அருள் மயமானது. இவ்வுண்மையே இந் ‘நயா’ என்ற சொல் உணர்த்த வந்துள்ளது.

அதாவது, நயா = நய+அ, இதில் அகரம் கடவுள் வண்ணமானது. நய என்பது, நமசிவய என்னும் தூல பஞ்சாககர புற வடிவமாம். இது கடவுளரின் அருட்சக்தி, ஞான சக்தி, யோக சக்தி, கிரியா சக்தி, பொருட்சக்தி என்னும் ஐந்தால் விளங்கும் பிரபஞ்சச் செயலை உணர்த்த வந்தது.

இதனால் அகத்தே தயவோடு இருந்து, புறத்தே தயா ஜோதி வாழ்வாம் கடவுள் ஐஞ்சக்தி கொண்டு வாழ்தல் வேண்டும்.