Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.468.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தியேழாம் அதிகாரம்.

அருள் விசாரம்.

புறத்தாயும் வேதப் பொருளெல்லாந் தாரா

அறத்தாம் விசார அருள்.

468

குறள் விளக்கம்.

மனோ கரணப் பயிற்சியினாலே வேத வேதாந்தங்களின் சொற்பொருளை எல்லாம் விசாரித்து நன்கு ஆராய்ந்து தெளிவதனால் மட்டும், பரம்பொருளாகிய மெய்ப்பொருள் அனுபவம் கிடைத்து விடாது.

புறத்தே பலவாறு ஆராய்ச்சியின் நிமித்தம் ஓடி ஒழலாது, அருள் உணர்வோடு அகத்திருந்து, மெய்ப் பொருளைத் தெரிவித்தல் வேண்டும்--என்று திருமுன்னர் விண்ணப்பித்து பிரார்த்தித்துக் கொண்டிருந்தால் நம் பதியின் திருவருளே நமக்கு உண்மையை நன்கு உணர்த்தி அனுபவம் வழங்கும்.