Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.466.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தியேழாம் அதிகாரம்.

அருள் விசாரம்.



6

ஓர மனமும் உளத்தொன்றாப் பொய்ப்புலமும்

தீர விசாரஞ் செயா.

466

குறள் விளக்கம்.

விருப்பு வெறுப்பற்ற நடுநிலை நின்று தயா விசாரம் செய்யாது. ஒரு தலைச் சார்பு கொண்டு உழலும் மனத்தாலும், சலனமற்று அகத்தே பொருந்து நிற்காது, புறத்தே படர்ந்து விரிகின்ற விடய ஞானத்தாலும் இந்த சத்விசாரம் உண்டாவதில்லை.

ஆதலின், பக்கம் சாரா பக்குவ மனத்தில், மெய் அறிவு விளங்கும் தூய உள்ளத்தில் தான் தீர்க்கமான சுத்த தயா விசாரம் உண்டாகின்றதாம்.