Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.465.

தயவுக்குறள்



சுவாமி சரவணானந்தா.



நாற்பத்தியேழாம் அதிகாரம்.



அருள் விசாரம்.







5

துக்கம் விசாரமல துக்கமறு சுத்ததயா

பக்குவ வுள்ளநிலைப் பாங்கு.

465

குறள் விளக்கம்.

இம்மார்க்கத்தில் விசாரம் என்று சொல்லப்படுவது துக்கம் அல்ல, துக்கத்தை நீக்குவதாம். அது பக்குவப்பட்ட உள்ளத்தில் சுத்த தயவு வண்ணமாய்ப் பொலிவதாகும். இச்சுத்த தயா விளக்கம் கொண்டு ஒளிரும் உள்ளத்தின் தன்மை யாதெனில், நிரதிசய ஆனந்தமாய், இரவு பகல் இல்லாது நித்தியமாய்த் திகழ்வதாம். இதுவே சுத்த விசார நிலை.

ஆகையால் விசாரம் என்பது துக்கமன்று. தத்துவ விசாரம், ஞான விசாரம், ஆன்ம விசாரம் இவற்றிற்கும் அதீதமானது சுத்த தயா விசாரம் ஆகும். இது ஒன்றே கடவுள் வாழ்வாம். ஆனந்த அனுபவம் வழங்குவதால் மேலான விசாரமாகும்.