Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.464.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தியேழாம் அதிகாரம்.

அருள் விசாரம்.

4

மனவருத்தம் மாற்றி மதியருள்சன் மார்க்கம்

வினையறுவி சார விளைவு.

464

குறள் விளக்கம்.

இவ்விசாரத்தால் விளைவது யாதெனில், அருள் ஞானம் விளங்கும் சன்மார்க்கமாம். இந்த மார்க்கத்தால்தான் மனிதன் மனக்கவலைகள் யாவும் ஒழிக்க வல்லவனாவான். அதற்கும் மேலாக இவ்விசார மார்க்கத்தினால் திருவருள் வெளிப்பட்டு வினைத் தொடரையே அறுத்திடலால் பிறப்பு இறப்பு அற்ற பேரின்ப நிலையும் சித்திப்பதாம். இதனால் மனக் கவலையோடு, மரண பயக் கவலையும் ஒழித்து அருள் ஆனந்த நித்திய வாழ்வு விளைவு கொள்ளுகின்றதாம்.