Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.458.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தைந்தாம் அதிகாரம்.

உபநயனம்



8

நம்பரனை யான்மாவில் நாம்போய் உணர்போத்

தன்பெருமை காட்டுந் தனித்து.

458

குறள் விளக்கம்.

ஆன்மா உண்மையில் நம் பதி உருவே. இதனை அறியாது ‘ஆன்மா நாம்’ என அகங்கரித்துச் சொல்லிக் கொண்டாடுகின்றோம். கன்ம தேகப் பற்றற்று ஆன்ம நிலையில் நின்று அருள் உணர்வால் அந்நிலையும் நாம் என்னும் அகங்காரமும் ஒழிந்து, நமது பதி ஒன்றே உள்ளதெனத் தெளிந்து நிற்றல் வேண்டும்.

இப்படி நிற்கும்போதுதான் தனித்தலைமைப் பெரும்பதி ஒருவரே தனிப்பெருங்கருணை ஆட்சி புரிந்து கொண்டுள்ளார் எனக் கண்டு கொள்ளுவோம். இந்தத் தன்மயானந்த அனுபவமே தனித்தனி ஒவ்வொரு ஆன்மாவுக்கும் அருளால் வழங்கப்படுவதாம்.