Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.454.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தைந்தாம் அதிகாரம்.

உபநயனம்

4

அணுத்திரளா மியாவும் அகமுடைத்தாஞ் சோதி

அணுவெடித்தாற் பேரொளியே யாம்.

454

குறள் விளக்கம்.

இவ்வுலகில் உள்ள எல்லாப் பொருள்களும் பூத அணுத் திரட்சியால் உருவானவைகளே. அணுக்கள் சிதையாது இருக்கவும், பலப்பல கூடி பூதப் பொருள்கள் ஆகிடவும் காரணமாய் உள்ளது, சிற்றணுவகத்தில் விளங்கும் மூல அசைவேயாம்.

இம்மூல அசைவினால், பேரொளி சக்தி அணுச் சிதைவால் வெளிப்படுகின்றது. ஆகையால், உருவாகியுள்ள பொருள் உலைந்து, அணு மயமாகி, அவ்வணுக்களும் வெடித்து அகச் சக்தி வெளியுறும்போது எங்கும் பேரொளி நிரம்பித் தோன்றும்.

இது போன்று, அருளாலே ஆன்ம அணுவினின்று அருட் பேரொளி வெளிப்படும்போது அருட்பெருஞ் ஜோதி மய அனுபவம் உண்டாகும்.