தயவுக்குறள் சுவாமி சரவணானந்தா. நாற்பத்தைந்தாம் அதிகாரம். உபநயனம் 3 பலவா முருவுள் பசுபதி யொன்றே நிலவக்கண் டொன்றி நிறை. 453 குறள் விளக்கம். அனந்த வண்ண பேத உருவங்களுக்கும் உள்ளீடாய் அமைந்தவை ஒரு தன்மையான ஆன்மாக்கள். இவ்வான்மாவுக்கு உள்ளிருப்பது நம் பசுபதி ஒருவரே, ஆதலின், இப்பதி நிலையினின்று அவரது அருள் கொண்டு நோக்கினால், எங்கும் தன்மயக் காட்சி விளங்கும். இதனை மூடி மறைத்துக் கொண்டிருக்கும் சீவ தேகாதி பிரபஞ்சங்கள் யாவும் இருந்தும் இல்லாதது போல் விளங்கும். எனவே, நம் பதியோடிருந்து தன் மயக்க் காட்சியால் தயா இன்பம் வளர்த்தல் நம் கடமையாகும்.
Write a comment