தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தைந்தாம் அதிகாரம்.
உபநயனம்
|
2
|
ஆன்மாவே மூல அசைவாகி யண்டபிண்ட
வான்செயல் கண்ட வகை.
|
452
|
குறள் விளக்கம்.
ஆன்மாவில் இயற்கையாக என்றும் கடவுள் அருட்சக்தி கலந்திருந்து இயங்கிக் கொண்டே இருப்பதால், அந்த அருள் உண்மை வெளிப்பட அகிலாண்ட கோடிகளும், அவற்றில் அனந்த அனந்த பிண்ட கோடிகளும் தோன்றி விளங்கி வளர்ந்து, சிதைந்து மறைந்து, மறுபடியும் மறுபடியும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
ஆதலின், இம்மகா பிரபஞ்சத்தில் ஆன்ம நிலை நின்று நோக்கும் போது யாவும் ஆன்ம இயற்கை இயக்க மயமாகவே கண்டு கொள்ளலாகும். ஆன்ம சிற்றணுவில் எழுகின்ற சிற்றசைவே அகண்ட பிரபஞ்சத் தோற்றக் காரணமாய்த் திகழ்வதாம்.