தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தைந்தாம் அதிகாரம்.
உபநயனம்
|
1 |
ஆன்மாவே தன்னுருவாய் ஆன்மாவே தன்கண்ணாய் ஆன்மாவே காணும் அது. |
451 |
குறள் விளக்கம்.
உபநயனம் ஆகிய ஞானக் கண் கொண்டு நோக்கும்போது தோற்றுவது இந்த தன்மயக் காட்சியே. ஆதலின், அதற்கடுத்து இவ்வதிகாரம் அணிசெய்து நிற்கின்றதாம்.
முன் கூறிய உபநயனமே ஆன்மாவின் கண்ணாகும். இந்தக் கண்ணால் தன்னையே தான் காணலாகும். புறக்கண்ணுக்கு அப்படித் தன்னையே தான் காணும் ஆற்றல் கிடையாது.
ஆன்மக் கண்ணிற்கு உள்ளீடாய் அருட்பதி இருந்து கொண்டு அருளாலே தன்னைத்தான் வெளிப்படுத்திக் கொண்டிருப்பதால்தான், ஆன்மாவுக்கு, இத்தற்காட்சி விளங்குகின்றது.
நம் பதி தானே தன்மயமாய் எங்கும் விளங்கலால், அவரது அருளால் ஒளிரும் சுத்த ஆன்மாவும் தன்னையே எங்கும் கண்டு தன் மயத்தில் நிற்கின்றதாம்.
Write a comment