Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.444

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தைந்தாம் அதிகாரம்.

உபநயனம்

4

உலகமெலாங் காணு முபநயனம் பாலத்

திலகுவது கொண்டுநோக் கிங்கு.

444

குறள் விளக்கம்.

பாலம் = லலாடம், நெற்றி நடுக் கண்ணிலங்கும் புருவ மத்திய இடம்.

தயா நன்முயற்சியில் எந்த அளவுக்கு ஓர்மை உண்டாகிறதோ அந்த அளவுக்கு இந்நுதற்கண் நோக்கும் படர்ந்து சென்று பிரபஞ்சப் படைப்பின் ரகசியத்தைக் கண்டு கொள்ளும். ஆகையால் தயா ஓர்மை கொண்டு திருவருளினால் இவ்வுபநயனத்தை முதலில் திறக்கப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும். இக்கண்ணால் தான் மெய்ப் பொருளைக் கண்டு அடையலாகும்.