Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.439.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தி நான்காம் அதிகாரம்.

பிறவித் தொடர்.





9

நினைப்பு மறப்பற நின்றதயா சுத்த

மனத்தார்க் கிலையே மடிவு.

439

குறள் விளக்கம்.



நித்தியமாய் உள்ள தயா சோதி, பதியோடு இரண்டறக் கலந்து, அது தானாகி நின்று தயை புரிந்து கொண்டிருப்பவர்கள் தம் நிலையை ஒரு போதும் மறப்பதில்லை, பின் நினைப்பது என்பதும் இல்லை. இந்நிலை பெற்ற மனமே சகல கேவலமற்ற சுத்த மனமாம்.



இச்சுத்த மனம் கொண்டு வாழ்பவர்கள், சுத்த தயா ஒளி வண்ணமாகி நித்தியமாய் விளங்குவார்கள். இவர்களுக்கு மரணமும் இல்லை, மேல் தொடர் ;பிறவியும் உண்டாகா.



.