Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.437

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தி நான்காம் அதிகாரம்.

பிறவித் தொடர்.

7

வளரொளி யுண்மை மருவிடற் காக

தளர்விலா துற்றபவச் சார்பு.

437

குறள் விளக்கம்.

மறையாது என்றும் வளரொளியோடு வயங்கும் பதியை அடைவதற்கு என்றும் இப்பிறவித் தொடர் ஓய்வு ஒழிவு இல்லாது வந்து கொண்டே உள்ளதாம். பவச் சார்பாகிய பிறவித் தொடர் நீங்க, பதிச்சார்பு கொண்டு அதுவாகி ஒளிர்தல் வேண்டும்.