தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தி நான்காம் அதிகாரம்.
பிறவித் தொடர்.
|
4 |
தயாவுண்மை யோரார் தரித்தவருஞ் சென்மத்தி னியாதறிந் தியாதோ இசை. |
434 |
குறள் விளக்கம்.
இம் மனிதப் பிறபிவியின் காரணமும் குறிக்கோளும் சுத்த தயா ஆதாரத்தின் மீது விளங்குவது. இதை அறியாது, ஏற்றுள்ள இப் பிறப்பைப் பற்றியும், வரும் ;பிறப்பைப் பற்றியும், சோதிட முதலிய கலைகளால் ஆராய்ந்து அறிந்து கொள்வதினால் என்ன பெருமை ! என்ன நன்மை ?
கடவுள் தயா ஆட்சியில் பேரின்ப நலமே விளையும் என்ற நம்பிக்கையுடன் தயா நன்முயற்சி வாழ்வு வாழ்ந்து கொண்டிருந்தால் எக்காலமும் நலமே உண்டாம். ஆதலின், முக்கால நிகழ்ச்சியை உணர்ந்து கொள்ள பெரு முயற்சி செய்ய வேண்டியதில்லை. அதனால் ;பெரும் பயனும் இல்லை.
Write a comment