Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.433



தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்பத்தி நான்காம் அதிகாரம்.

பிறவித் தொடர்.

3

பாவவினைக் குற்ற பவத்தி லொளித்துப்பின்

பூவருமே மாந்தர் புரி.

433

குறள் விளக்கம்.

ஆன்மாவானது மனித தேகத்தில் பாவ வினை புரியும் ஆயின் அதற்குத் தண்டனையாக, அடுத்து அறிவு விளக்கம் குன்றிய கீழான பிறவியில் குறிப்பிட்ட காலம் வரை அடைபட்டு கிடந்து மறைந்திருந்து விட்டு, மறுபடியும் தயாநியதியால் மனித தேகம் வழங்கப்படும்.

ஆகையால், நல்லறிவு படைத்த நாம், பாவவினை செய்து கீழ்நிலையுற்று நெடுங்காலம் துன்ப வாழ்வில் அழுந்திக் கிடக்காது, தயா அறச் செயலால், மனிதப் பிறவியில் நல்வாழ்வு வாழ்ந்து தயா இன்பம் காண்போமாக.