Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.431



தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.



நாற்பத்தி நான்காம் அதிகாரம்.

பிறவித் தொடர்.

1.

ஒருபிறப்பிற் றான்கொண்ட உள்ளொளியே யோங்க

வருபிறப் புண்டாம் வலிந்து.

431

குறள் விளக்கம்.

கடவுள் நியதியால் உலகெலாம் இயங்குகின்றது. ஆன்மாக்களுக்கு பிறவிகளும் இந்நியதியால் வருவனவாக புகலப்பட்டது. சென்ற அதிகாரத்தில். அப்படி வரும் ஒரு பிறப்புக்கும் முன் பிறப்புக்கும் ஏற்படும் தொடர்பும், அதுபோல் மேல் வ்ரும் பிற்விகள் ஒவ்வொன்றிற்கும் ஆதாரமாகிய தொடர்பும் பற்றி இவ்வதிகாரத்தில் ஓதப்படுகின்றதாம்.

அறிவு விளக்கம் நிறைவெய்துவதற்காகவே மேன்மேலும் பிறவி தொடர்கின்றன. ஒரு பிறப்பில் ;பெற்ற அறிவு விளக்கம், அடுத்த பிறவியில், தேக பக்குவம் வந்த பின், முன் விட்ட இடத்தினின்று மேல் தொடர்கின்றதாம். இதற்காகவே மறுபிறப்பு எடுக்க வேண்டிய அவசியம் உண்டாகின்றதாம். திருவருள் இதனால் வலிந்து மேல்பிறப்பு அளிக்கின்றதாம்.

ஆன்மாவின் உள்ஒளி குன்றாது மேல் நோக்கு வளர்ந்து கொண்டே இருக்கத்தான், பிறவித் தொடரும் மேல்நிலை நோக்கி தடையுறாது சென்று கொண்டுள்ளதாம்