தயவுக்குறள்
சுவாமி சரவணானந்தா.
நாற்பத்தி மூன்றாம் அதிகாரம்.
தயாநியதி
|
5. |
கோதிலருள் ஆறடையா கோணாளைக் கூர்ந்தறியுஞ் சோதிடத்தா லுண்டோ சுகம். |
425 |
குறள் விளக்கம்.
வான சோதி நூலாய்ந்து, கோளையும், நாளையும் கொண்டு சோதிட வழியில் மிகக் கவனமாய் வாழ்க்கையை நடத்துவதால், ஈசன் அருள் வந்து அடைந்திடாது. அதனால் பேரின்பமும் உண்டாகாது
திருவருள் நெறியில் சென்று இறை இன்ப நிலையுறல் வேண்டும். இதற்கு, அண்ட பிண்ட விசாரத்தால், அருட் சக்தியின் பேருண்மையை கண்டு அடையவே, அகண்ட பிரபஞ்சமும் அதிலுள்ள கோட்களும் நாட்களும், மற்ற பொருள்களும் விளங்குகின்றனவாம்.
Write a comment