Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
தினம் ஒரு தயவுக்குறள் எண்.420.

தயவுக்குறள்

சுவாமி சரவணானந்தா.

நாற்;பத்திரண்டாம் அதிகாரம்.

வினையுடம்பு

10

தளையற வேண்டில் தயாவினை சூழ்க

விளைவுறுஞ் சாகாத மெய்.

420

குறள் விளக்கம்.

தளை = பந்தம்.

வினைக்கட்டாகிய பந்தம் நீங்கி முத்தி சித்தி பெற வேண்டுமானால், சுத்த தயவுச் செயல் புரிதல் வேண்டும். இங்கு “தயாவினை சூழ்க” என்றது, தயவுச் செயல் புரிக எனச் சொல்ல வந்தது மட்டுமல்ல, தயவாகிய கடவுள் ஒளியைச் சூழுக, அல்லது அடைக என்பதுமாம். அங்ஙனம் அதனை அடைந்து நின்றே தயா செயல் புரிதல் வேண்டும் என்பதும் தொகுத்து உரைக்கப்பட்டதாம். ஆகவே, இத்தயவினால் தான் அழிவற்ற ஒளி வடிவம் விளைவுறும்.